யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கை அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 10-ஆம் தேதி முதல் அப்பகுதி மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த மாதம் அக்டோபர் 6-ஆம் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவித்தது.
மோதல் மற்றும் வன்முறை
மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு, இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.
தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, லே நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்குத் தீ வைத்தும், கல்வீசித் தாக்குதல் நடத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
LIVE 24 X 7









