பெங்களூருவில் வசித்து வரும் ஷதாப் (19) என்ற இளைஞர் தனது தாய் மாமாவின் திருமணத்திற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள நாகூர் என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவர் கடந்த 21 ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது.
குடும்பத்தினர் அவரை தேடியபோது, கிராமத்திற்கு வெளியே ஒரு கொய்யா தோட்டத்தில் பாழடைந்த கிணறு அருகே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஷதாபின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு, அவரது தலை ஒரு செங்கல்லால் தாக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வாழ பதிவு செய்த போலீசார் அந்த கிராமத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, போலீசார் நேற்று (ஜூன் 28) 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறார்களை கைது செய்துள்ளார். மேலும் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்
மேலும் போலீசார் விசாரணையில் அந்த சிறார்கள் கூறியதாவது, சிறந்த ரீலிஸ் எடுப்பதற்காக ஐபோன் தேவைப்பட்டதாகவும், இதனால் ஷாதாப்பை கொலை செய்து அவரது ஐபோனை திருடியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஷாதாப்பை ரீலிஸ் எடுக்க வேண்டும் என ஊருக்கு ஒதுக்குபுறமாக அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.
மேலும், ஷதாபின் ஐபோன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் செங்கல் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார், இரண்டு சிறார்களையும் கோண்டாவில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









