இந்தியா

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள்.. மருத்துவர்கள் அதிர்ச்சி!

ஜெய்ப்பூரில் மனநல பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது வயிற்றில் இருந்து 7 டூத் பிரஷ் மற்றும் 2 ஸ்பேனர்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள்.. மருத்துவர்கள் அதிர்ச்சி!
Iron spanners in young man's stomach
ஜெய்ப்பூரில் மனநல பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது வயிற்றில் இருந்து 7 டூத் பிரஷ் மற்றும் 2 ஸ்பேனர்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான வயிற்று வலியுடன் அனுமதி

கடந்த டிசம்பர் 26 அன்று, 26 வயது இளைஞர் ஒருவர் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுவதாகத் தெரிவித்தார். உடனடியாக மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வலிக்குக் காரணத்தைக் கண்டறியத் தொடங்கினர்.

டூத் பிரஷ் & ஸ்பேனர்கள் கண்டுபிடிப்பு - அறுவை சிகிச்சை

சோனோகிராஃபி பரிசோதனையில், அந்த இளைஞரின் வயிற்றில் 7 டூத் பிரஷ்கள் மற்றும் 2 ஸ்பேனர்கள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையின்போது, மருத்துவர்கள் அந்த இளைஞரின் வயிற்றில் இருந்து இரண்டு இரும்பு ஸ்பேனர்கள், ஏழு டூத் பிரஷ்களையும் வெற்றிகரமாக அகற்றினர்.

மனநலப் பிரச்னையே காரணம்

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய டாக்டர் பரேக், நோயாளி மனநலப் பாதிப்பால் அவதிப்படுவது கலந்துரையாடலின்போது தெரியவந்ததாகக் கூறினார். இதுபோன்ற உண்ணக்கூடாத பொருட்களை விழுங்குவது உயிருக்கே ஆபத்தாகலாம் என்றும், யாரேனும் வினோதமான பொருட்களை உட்கொண்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.