இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகம்
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகனாகச் சந்தீப் கிஷன் நடிக்க, இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
'சிக்மா' படத்தின் பிரம்மாண்ட வெளியீடு
ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு 'சிக்மா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவு குறித்த அறிவிப்பை, படக்குழுவினர் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய காணொளியை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்தப் படத்தின் டீசர் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. விஜய் மகனின் முதல் பட டீசர் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
SIGMA shoot wrapped 🎬✨
— Lyca Productions (@LycaProductions) December 19, 2025
Get ready for the Teaser on 23.12.25 at 5 PM.@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 #RajuSundaram #SampathRaj @shivpanditt @follow_anbu @yogjapee @Cinemainmygenes @krishnanvasant… pic.twitter.com/aua7GieWwR
LIVE 24 X 7









