சினிமா

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!
Jason Sanjay 1st Film Title
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராகத் தனது முதல் அடியை எடுத்து வைக்கும் திரைப்படத்தின் டைட்டில் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு 'சிக்மா' (Sigma) என்று பெயரிடப்பட்டுள்ளது.

டைட்டில் வெளியீடு

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், தற்போது 'சிக்மா' என்ற தலைப்புடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைப்பு வெளியீட்டுடன் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.

போஸ்டரில், கதாநாயகன் சந்தீப் கிஷன் கிழிந்த ஆடைகளுடன், காயமடைந்த நிலையில், கட்டுப்போட்டுக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறார்.

அவர் அமர்ந்திருக்கும் பின்னணியில், மலை போலக் குவிந்து கிடக்கும் பணக்கட்டுகள், பணம் நிறைந்த பெட்டிகள் மற்றும் தங்கக் கட்டிகள் ஆகியவை சிதறிக் கிடக்கின்றன.

போஸ்டரில் உள்ள இந்தச் சூழல், இந்தப் படம் பணப் பரிமாற்றம், க்ரைம் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் கலந்த ஒரு த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

படக்குழு விவரம்

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைக்கிறார். மேலும், கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படம் ஜேசன் சஞ்சய்க்கு வெற்றி படமாக அமையும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.