சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா!

விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, ZEE தமிழ் தொலைக்காட்சி மற்றும் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாக உள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா!
Jana Nayagan Audio Launch
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் அரசியல் பின்னணியுடன் கூடிய ஆக்‌ஷன் திரில்லராக, இயக்குநர் H. வினோத் இயக்கத்தில், KVN புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இது KVN நிறுவனத்தின் முதல் தமிழ்த் தயாரிப்பு என்பதுடன், நடிகராக விஜய் மேற்கொள்ளும் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நட்சத்திர பட்டாளம்

'ஜன நாயகன்' திரைப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய்யின் கடைசி மேடைப் பேச்சு

சமீபத்தில் மலேசியாவில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், நடிகர் விஜய் தனது திரை வாழ்க்கையின் கடைசி மேடை உரையை வழங்கினார். அவரது கலைப் பயணத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது பிரபலமான பாடல்களும் நடனமும் கொண்ட நேரடி மேடை நிகழ்ச்சிகளும் விழாவில் இடம்பெற்றன.

ஒளிபரப்பு விவரம்

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த இசை வெளியீட்டு விழாவைக் காணும் விதமாக, 'ஜன நாயகன்' இசை வெளியீட்டு நிகழ்ச்சி வரும் ஜனவரி 4 ஆம் தேதி, மாலை 4.30 மணிக்கு, ZEE5 தளத்திலும் ZEE தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக உள்ளது.