இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும். பாபி டியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும், நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் 'தளபதி வெற்றிக் கொண்டான் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி 'ஜன நாயகன்' படப்பிடிப்பை நடிகர் விஜய் நிறைவு செய்தததாக கூறப்பட்டது. அவரது படப்பிடிப்பின் இறுதி நாளில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியதாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து, கடந்த 16 ஆம் தேதி நடிகை பூஜா ஹெக்டேவும் தனது கதாபாத்திரத்துக்கான ஷுட்டிங்கை நிறைவு செய்ததாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். இதனால் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்டம் 'தி ஃபர்ஸ்ட் ரோர்' வரும் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்சன்ஸ் தெரிவித்துள்ளது. அதாவது விஜய்யின் பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணி இந்த முன்னோட்ட காட்சி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
முன்னதாக விஜய் பிறந்தநாள் அன்று 'ஜன நாயகன்' படத்தின் டீசர் வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









