சினிமா

'நாயகன்' திரைப்பட மறுவெளியீட்டுக்கு தடை கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

கமல்ஹாசனின் 'நாயகன்' திரைப்படம் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

'நாயகன்' திரைப்பட மறுவெளியீட்டுக்கு தடை கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
Nayagan Re release
நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, மணிரத்னம் இயக்கத்தில் 1987-ஆம் ஆண்டு வெளியான 'நாயகன்' திரைப்படம் மறு வெளியீடு செய்ய இடைக்கால தடைவித்த சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மனுதாரரின் கோரிக்கை

'நாயகன்' படத்தின் வெளியீட்டு உரிமை தங்களிடமே இருப்பதாகக் கூறி, எஸ்.ஆர். ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர். ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், 'நாயகன்' திரைப்படத்தை வெளியிடும் உரிமையை 2023-ஆம் ஆண்டு ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து தாம் பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த உரிமையை மறைத்து வி.எஸ். பிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், "ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே படம் மறு வெளியீடு செய்யப்படுவதால்," 'நாயகன்' திரைப்படத்தின் மறு வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார்.

அதேசமயம், மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும்படி, ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் வி.எஸ். பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதியின் சுவாரஸ்யக் குறிப்பு

விசாரணையின்போது, நீதிபதி என். செந்தில்குமார், "நாயகன் படத்தை நான் 16 முறை பார்த்துள்ளேன் என்றும், காட்சி வாரியாகத் தன்னால் இப்போது சொல்ல முடியும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.