சினிமா

கோலிவுட்டில் பரபரப்பு: ஸ்ருதிஹாசன் - லோகேஷ் கனகராஜ் நட்பு முறிவு?

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பின்தொடர்வதிலிருந்து 'அன்ஃபாலோ' (Unfollow) செய்துள்ளார்.

கோலிவுட்டில் பரபரப்பு: ஸ்ருதிஹாசன் - லோகேஷ் கனகராஜ் நட்பு முறிவு?
Shruti Haasan and Lokesh Kanagaraj friendship breaks down
பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பின்தொடர்வதிலிருந்து 'அன்ஃபாலோ' (Unfollow ) செய்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'கூலி' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அவர், அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'டிசி' (DC) என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து லோகேஷ் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷ் - ஸ்ருதிஹாசன் இடையேயான நட்பு

முன்னதாக, நடிகை ஸ்ருதி ஹாசன், லோகேஷ் கனகராஜுடன் இணைந்து 'இனிமேல்' என்கிற ஆல்பம் பாடலிலும் நடித்திருந்தார். இதற்குப் பின்னரே, லோகேஷ் இயக்கிய 'கூலி' திரைப்படத்திலும் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படி இருவருக்கும் இடையே நட்பு நிலவி வந்த நிலையில், ஸ்ருதிஹாசன் திடீரென லோகேஷ் கனகராஜை இன்ஸ்டாகிராமில் 'அன்ஃபாலோ' (Unfollow) செய்திருப்பது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் எழுந்த கேள்விகள்

கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பின்தொடரும் ஸ்ருதிஹாசன், இப்போது உச்சத்தில் இருக்கும் இயக்குநரான லோகேஷ் கனகராஜை 'அன்ஃபாலோ' செய்தது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. குறிப்பாக, ஸ்ருதிஹாசன் லோகேஷை 'அன்ஃபாலோ' செய்திருந்தாலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்போதும் ஸ்ருதிஹாசனை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வது இந்த விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இருவருக்கும் இடையே தனிப்பட்ட காரணங்களாலோ அல்லது சமீபத்திய 'கூலி' படத்தின் அனுபவத்தாலோ ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாமா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இருப்பினும், இந்தச் செயல் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் தரப்பிலோ அல்லது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தரப்பிலோ இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது கருத்தோ வெளியிடப்படவில்லை.