தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இவரின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இதையடுத்து இவர் நடித்த ’தி ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்நிலையில், இவர் ‘ஜெர்ஸி’ படத்தின் இயக்குநர் கெளதம் தின்னனுரி இயக்கத்தில் ‘கிங்டம்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்தில், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில், விஜய் தேவரகொண்டா அண்டர் கவர் ஸ்பையாக நடித்துள்ளார்.
இந்த படம் வெளியான முதல் நாள் திரையரங்குகளில் ரசிகர்கள் விஜயதேவரகொண்டாவுக்கு பேனர்கள் வைத்து மாலை அணிவித்து நடனமாடி கொண்டாடினர். ‘கிங்டம்’ படம் தெலுங்கில் மட்டுமல்லாமல், தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தின் இரண்டாவது பாகத்துக்கு ஆவலுடன் காத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் இரண்டு பாகமாக வெளியாகும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வெளியான முதல் நாளில் ரூ.39 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், படத்தின் 2 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் உலகளவில் ரூ.53 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களை முன்னிட்டு படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
That’s how #KINGDOM gets hailed big with the audience’s love 💥💥#BoxOfficeBlockbusterKingdom hits 53Cr+ worldwide gross in 2 days 🔥🔥
— Sithara Entertainments (@SitharaEnts) August 2, 2025
🎟️ - https://t.co/4rCYFkzxoa@TheDeverakonda @anirudhofficial @gowtam19 @ActorSatyaDev #BhagyashriBorse @Venkitesh_VP @dopjomon… pic.twitter.com/xW6M0dd3s8
LIVE 24 X 7









