K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=5%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D

திமுக ஒன்றிய செயலாளர் மீது ரூ.85 லட்சம் மோசடி புகார்: நண்பர் எஸ்பி அலுவலகத்தில் மனு!

தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு தனது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இன்று ஆயுள் தண்டனை வழங்கிச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரூ.35 லட்சம் நில விவகாரம்.. மன்சூர் அலிகான் மகன் தகராறு.. போலீசார் விசாரணை!

நடிகர் மன்சூர் அலிகான் நிலத்திற்காக்நிலம் வாங்குவதற்காக ரூ. 35 லட்சத்தை வாங்கி விட்டு இடத்தை தரவில்லை இடத்தின் உரிமையாளரிடம் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்திற்கு வந்து விளக்கம் அளித்த நிலையில், நீதிமன்றம் மூலம் தீர்த்து கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சிறுமி பாலியல் வழக்கு... குற்றவாளியைப் பிடிக்க ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்த காவல்துறை!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் நபர்குறித்து நம்பகமான தகவல் வழங்குவோருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி என்று காவல்துறை அறிவித்துள்ளது. சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்… அக்ஷய் குமார் எடுத்த அதிரடி முடிவு!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது திரைப்படங்களில் செய்யும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுக்காகப் பிரபலமானவர் தற்போது அவர் எடுத்துள்ள மனிதாபிமான முடிவு திரைப்படத் துறையில் பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது

நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.