K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=2026tamilnadu

திமுகவின் வாக்குறுதிகள் என்ன ஆனது? - திருச்சியில் சரமாரி கேள்வி எழுப்பிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியில் இன்று தொடங்கினார். அப்போது ஆளும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்த அவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டன எனச் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

திருச்சி மண் ஒரு திருப்புமுனையாக அமையும் - தொண்டர்கள் மத்தியில் விஜய் பரப்புரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியிலிருந்து இன்று தொடங்கினார். அப்போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தல், ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆர்ப்பாட்டம்: ஆளும் அரசுக்கு நேரடி எச்சரிக்கை!

பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்

சட்டமன்ற தேர்தல் 2026: ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணம் தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.