K U M U D A M   N E W S

தமிழக செய்திகள்

தீபாவளிக்கு எத்தன நாள் லீவு? தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறுநாளான நவம்பர் 9-ம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கு ரூ.26 லட்சம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.15 லட்சம்! – கார் வாங்க தமிழக அரசு போட்ட புது கணக்கு!

தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான விதிமுறைகள் தற்போது அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்… 4 நாட்களுக்குப் பின் அழுகிய சடலமாக மீட்பு! மயிலாப்பூரில் அதிர்ச்சி!

சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில், பாழடைந்த அறையில் இருந்த ஒன்றரை அடி துவாரத்தில் விழுந்து 55 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஏர்போர்ட்ட தனியாருக்கு குடுங்க ! பிரதமருக்கு விஜய் எழுதிய ரகசிய கடிதம் லீக் !

சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்த முதலமைச்சர் விஜய், AAI நிர்வாகத்திலிருந்து வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெகவில் இணைய வலியுறுத்தல்? பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்..!

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பணம் கொடுத்து மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஜக MLA டாக்டர் சரஸ்வதியின் மகள் காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு!

மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் சி.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வாக்காளர்களை நீக்கியதே ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணம் - தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கருத்து

டெல்லியில் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்களை நீக்கியதே ஆம் ஆத்மி  கட்சியின் தோல்விக்கு காரணம் என்று தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி - ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம்

தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி அதனை அனைவரும் கற்று தெரிந்து கொள்ள வேண்டும்  பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஆளுநர் பேசியுள்ளார். 

ஈரம் கூட காயாத தாலி..! மணமகன் மர்ம மரணம்..!

கட்டிய தாலியின் ஈரம் கூட காயாத நிலையில், நண்பர்களைப் பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற புது மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரபணு குறைபாடு: குழந்தைக்காக ஒன்றிணைந்த தல – தளபதி ரசிகர்கள்…!

மரபணு குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூரைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தையின் சிகிச்சைக்காக அஜித் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் இணைந்து நிதி திரட்டி வருகின்றனர். இந்த நிலையில், தங்கள் மகளை காப்பாற்றத் துடிக்கும் பெற்றோரின் அவலநிலை, பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.