K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் - கரூர் துயரம் குறித்து எஸ்.வி. சேகர் கடும் தாக்கு!

நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்

சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டது - ஜெயக்குமார் அதிரடி!

மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

விளம்பர மோகம் தலைக்கேறிய விடியா அரசு வீழும் காலம் நெருங்கிவிட்டது - நயினார் நாகேந்திரன்!

சத்துணவுத் திட்டச் சீர்கேடுகளை மறைக்கவும், நிர்வாகத் தோல்விகளை மூடிமறைக்கவும் திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் விளம்பர மோகத்துடன் பிரம்மாண்ட விழாக்களை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.