தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை!
சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளால் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 2) சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.87,040-க்கு விற்பனையாகிறது.
சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளால் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 2) சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.87,040-க்கு விற்பனையாகிறது.
புதிய நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அமெரிக்க அரசு நிர்வாகச் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நிபந்தனையை டிரம்ப் அரசு ஏற்காததால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து அரசுச் சேவைகளும் நிறுத்தப்படுகின்றன.