மகள் பனிச்சறுக்கு விளையாட்டை கண்டு தென்கொரிய அதிபர் உற்சாகம்

மகள் பனிச்சறுக்கு விளையாட்டை கண்டு தென்கொரிய அதிபர் உற்சாகம்

மகள் கிம் ஜு ஏவுடன் சீன எல்லைக்கு அருகே உள்ள சாம்ஜியோன் பனிச்சறுக்கு சுற்றுலாத் தலத்துக்குச் சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், மகள் விளையாடுவதை உற்சாகமாக ரசித்த புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

Author: kazhugu k உலகம்

தென்கொரிய அதிபர் கிம் ஜாங் உன் செயல்பாடுகள் பொழுதுமே உலக அளவில் கவனத்தை ஈர்க்கின்றன.

அணு ஆயுத சோதனைகளை நடத்தி மிரட்டல் விடுப்பதில் தொடங்கி, இவரது அரசியல் நடவடிக்கைகள், அமெரிக்கா போன்ற வல்லரசுகளையும் மிரள வைக்கின்றன.

இப்படி சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்படும் தலைவராக காணப்படும் கிம் ஜாங் உன், மகிழ்ச்சியாக இருக்கும் சில தருணங்களும் அது தொடர்பான புகைப்படங்களும் பேசு பொருளாகி வருகின்றன.

அந்த வகையில் தனது மகள் கிம் ஜு ஏவுடன் இணைந்து சீன எல்லைக்கு அருகே அமைந்துள்ள பனிச்சறுக்கு சுற்றுலாத் தலத்தை நேரில் அவர் ஆய்வு செய்தார்.

வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்தில் சீன எல்லைக்கு மிகவும் அருகாமையில் உள்ள சாம்ஜியோன் சுற்றுலா மண்டலத்தை மேம்படுத்தும் பணிளை அவர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

அந்த பகுதிக்கு சென்ற கிம் ஜாங் உன், புதிதாகக் கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகள், தங்கும் அறைகள் மற்றும் சுற்றுலா ரயில் பாதை ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுப் பணிகளுக்கு பிறகு சாம்ஜியோன் நகரில் உள்ள புக்போட்டே மலை பனிச்சறுக்கு தளத்திற்கு குடும்பத்தினருடன் அவர் சென்றார்.

அங்கு வெள்ளை நிறப் பனிச்சறுக்கு உடை அணிந்திருந்த கிம் ஜாங் உன், மகள் மிகுந்த உற்சாகத்துடன் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த கிம் ஜாங், மகிழ்சியுடன் அந்த இடத்திலேயே நற்காலியில் அமர்ந்து விட்டார்.

தனது மகள் பனிச்சறுக்கு விளையாடுவதை ஆனந்தமாக அவர் கண்டு ரசித்தார். அப்போது கிம் ஜாங் உன்னின், மனைவி ரி சோல் ஜு, சசோதரி கிம் யோ ஜாங் உடனிருந்தனர்.

இந்த பயணம் குறித்த புகைப்படங்களை வட கொரிய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டிரம்பையும் , ரஷ்ய அதிபர் புதினையும் வட கொரிய அதிபர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் சீன எல்லைக்கு அவர் மேற்கொண்ட பயணம் வழக்கம் போல் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

மேலும் வட கொரியாவின் அடுத்த தலைமையாக பார்க்கப்படும், கிம் ஜு ஏ, தனது தந்தை கிம் ஜாங் உன்னுடன் பொது இடத்தில் இருக்கும் புகைப்படங்களை தென் கொரிய அரசு அண்மைகாலமாக வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.