தமிழ்நாடு

சென்னைக்கு ஆதவ் தலைமையில் அமைச்சர்கள் குழு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

ஆதவ் அர்ஜுனா தலைமையில் சென்னைக்கு மண்டல வாரியாக 7 பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

சென்னைக்கு ஆதவ் தலைமையில் அமைச்சர்கள் குழு..  தமிழக அரசு அதிரடி உத்தரவு!
Team of ministers led by Aadhav to visit Chennai
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவுபடுத்தவும், பேரிடர் கால நிவாரணப் பணிகளை உடனுக்குடன் மேற்கொண்டு கண்காணிப்பக்கவும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 7 அமைச்சர்கள் பொறுப்பாளர்களாகப் பகிர்ந்தளிப்பட்டுள்ளனர்.

பொறுப்பு அமைச்சர்கள்

சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்கள் அமைச்சர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. அதன்படி:

திருவொற்றியூர் மற்றும் மணலி: அமைச்சர் ரமேஷ்

மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டை: அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்

ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர்: அமைச்சர் அருண்ராஜ்

அம்பத்தூர், அண்ணா நகர் மற்றும் தேனாம்பேட்டை: அமைச்சர் விஜய் பாலாஜி

கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம்: அமைச்சர் பிரபு

ஆலந்தூர் மற்றும் அடையாறு: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்

பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர்: அமைச்சர் விக்னேஷ்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேற்பார்வை

சென்னை மாவட்டப் பொறுப்பு அமைச்சரும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, மாவட்டம் முழுவதிலும் நடைபெறும் அனைத்துக் களப்பணிகளையும் நேரில் சென்று மேற்பார்வையிடுவார். மேலும், 15 மண்டலங்களிலும் பொறுப்பு அமைச்சர்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து வளர்ச்சி மற்றும் நிவாரணப் பணிகளையும் ஒருங்கிணைக்கும் பிரதானப் பொறுப்பை அவர் ஏற்றுச் செயல்படுவார்.