இந்த வாரம் முதலே குறைந்து வந்த தங்கம் விலை, இன்று சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம்(அக்.,-15) சவரனுக்கு ரூ 600 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,08,120க்கும், கிராமுக்கு ரூ 75 குறைந்து ஒரு கிராம் ரூ 13,515 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து நேற்று(அக்.,-16)தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,08,280க்கும் ,கிராமுக்கு ரூ 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,535க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
இன்றைய வெள்ளி விலையில் எந்த வொரு மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 240க்கும் ஒரு கிலோ 2,40,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
LIVE 24 X 7









