தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய ஒரு தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தைத் தாண்டி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை சந்தித்த பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவர், வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக குறிப்பிட்ட ஒரு தொகுதியில் தனக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டதாக புஸ்ஸி ஆனந்த் நேற்றைய தினம் சட்டப்பேரவையில் கூறினார்.
அந்த இயக்குனரின் பெயரை புஸ்ஸி ஆனந்த் வெளிப்படையாக குறிப்பிடவில்லை. இருப்பினும், அவர் கூறிய தகவல்களையும், சட்டப்பேரவையில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தையும் வைத்து அந்த இயக்குனர் யார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
இதுகுறித்து புஸ்ஸி ஆனந்த் கூறிய தகவலில், "நீங்கள் ஒரு பெரிய இயக்குனராக இருக்கலாம். ஆனால் அந்த தொகுதியில் பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் மாவட்ட செயலாளர் இருக்கிறார். அவரை விட்டுவிட்டு உங்களுக்கு அந்த தொகுதியை கொடுக்க முடியாது நண்பா, என்று தலைவர் சொல்லிவிட்டார்" என கூறினார்.
மேலும், கட்சிக்காக நீண்ட காலமாக களத்தில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டையும் புஸ்ஸி ஆனந்த் பெருமையாக பேசினார்.
இந்த தகவல் வெளியாகிய நிலையில், அந்த இயக்குனர் யார் என்ற கேள்வி அரசியல் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையே சட்டப்பேரவையில் நடைபெற்ற மற்றொரு சிறிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் முக்கியமான க்ளூவாக மாறியுள்ளது.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிக்கொண்டிருந்தபோது, தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.வும் வேளாண்துறை அமைச்சருமான வினோத், தனக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏ. விக்னேஷை கை காட்டி கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் வெற்றி பெற்ற கிணத்துக்கடவு தொகுதியை வைத்து நெட்டிசன்கள் பல்வேறு தகவல்களை ஒப்பிட்டு பார்க்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கலாம் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏனென்றால், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சொந்த ஊரும் கிணத்துக்கடவுதான்.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகவும் பிரபலமானது. மாஸ்டர் மற்றும் லியோ என விஜய்யை வைத்து இரண்டு வெற்றிப் படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பும் இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், "அவ்வளவு நெருக்கமான இயக்குனராக இருந்தாலும், பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவரை விட்டுவிட்டு சீட் கொடுக்க விஜய் மறுத்துவிட்டாரா?" என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தாலும், த.வெ.க.வினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆகையால், அமைச்சர் ஆனந்த் கூறிய பெரிய இயக்குநரும், கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ.வை கைகாட்டிய அமைச்சர் வினோத்தின் செய்கையையும் இணைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் அந்த பிரபல இயக்குநராக இருப்பார் என்று சினிமா ரசிகர்கள்களும், அரசியல் விமர்சகர்களும் டீகோட் செய்து வருகின்றனர்.
இதனால், புஸ்ஸி ஆனந்த் கூறிய அந்த "பிரபல இயக்குனர்" உண்மையில் யார் என்ற விவாதம் தற்போது அரசியல் வட்டாரத்திலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7