நீட் மறுதேர்வுகளுக்கு முன்னதாக, கசிந்த தேர்வு வினாத்தாள்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், டெலிகிராமை ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கவும், அதன் திருத்தும் அம்சத்தை ஒரு வாரத்திற்கு முடக்கவும் இந்திய அரசு உத்தரவிட்டது. இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் எதிர்த்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் உட்பட, இந்தியாவிற்கு வெளியே உள்ள மில்லியன் கணக்கான பயனர்களின் டெலிகிராம் அணுகலை ரிலையன்ஸ் நிறுவனம் சீர்குலைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து X தளத்தில் பதிவிட்ட பாவெல் துரோவ்,
"இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், BGP ஹைஜாக்கிங் எனப்படும் ஒரு முறைகேடான வழிமுறையின் மூலம், இந்தியாவிற்கு வெளியே (ஐக்கிய அரபு அமீரகம் உட்பட) உள்ள மில்லியன் கணக்கான பயனர்களின் டெலிகிராம் அணுகலைச் சீர்குலைத்து வருகிறது," என்று அவர் கூறினார்.
ரிலையன்ஸ் பல புகார்களைப் புறக்கணித்துள்ளதால், இந்த நாசவேலை திட்டமிட்டே செய்யப்பட்டது போல் தெரிகிறது. வாட்ஸ்அப்பை உருவாக்கிய நிறுவனமான மெட்டா, ரிலையன்ஸின் ஒரு பகுதி உரிமையாளராக இருப்பதால், இது ஒரு போட்டா போட்டிப் போரின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
வழித்தடத் திருட்டுகளைத் தடுக்கவும், தங்கள் பயனர்களுக்கு நிலையான இணைய அணுகலை உறுதி செய்யவும், ரிலையன்ஸின் (AS18101) அங்கீகரிக்கப்படாத BGP அறிவிப்புகளை நிராகரிக்குமாறு நெட்வொர்க் ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உலகளாவிய இணைய வழித்தடத்தின் இத்தகைய தவறான பயன்பாடு கவலை அளிக்கிறது. இந்தியாவில் டெலிகிராமைத் தடை செய்வதற்கான சமீபத்திய முயற்சிக்குப் பின்னாலும் ரிலையன்ஸ்/வாட்ஸ்அப் இருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

LIVE 24 X 7