ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற விழாவில் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று படப்பிடிப்பு தொடங்கியதை வீடியோவுடன் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமானராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. கமல்ஹாசனுடன் இணைந்து ஆர். மகேந்திரனும் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படம், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ‘டிராகன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அஸ்வத் மாரிமுத்து, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குவது ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
மேலும், படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7