ADiRA (AI for Digital Readiness & Advancement) என்ற பெயரிலான இந்தத் திட்டம், செய்தித் துறை வல்லுநர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மூலம், ஊழியர்கள் AI கருவிகளைப் பயன்படுத்திச் செய்தி சேகரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளில் தங்கள் செயல்திறனை அதிகரிக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் முடியும். நிறுவனத்தின் வசதிக்கு ஏற்ப ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேராகவோ (In-person) இந்த ஆழமான பயிற்சி வழங்கப்படுகிறது.
DataLEADS நிறுவனத்தின் இந்த முயற்சியானது, குறிப்பாகச் செய்தித்துறை மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த நிபுணர்களுக்கு நடைமுறை AI திறன்களைப் பயிற்றுவிப்பதன் மூலம், அவர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பொறுப்பான முறையில் AI கருவிகளையும், அதன் அணுகுமுறைகளையும் பயன்படுத்துவது குறித்துப் பயிற்சி அளிப்பதில் இந்தத் திட்டம் அதிக கவனம் செலுத்துகிறது.
இந்த ADiRA பயிற்சித் திட்டம், நாட்டில் தொழில்நுட்பம் சார்ந்த, புதுமையான மற்றும் உலக அளவில் போட்டித்தன்மை கொண்ட ஒரு பணியாளர் சமுதாயத்தை உருவாக்க உதவும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. AI-யின் அசுர வேகமான மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, IPD Tamil நிறுவன ஊழியர்களுக்கு AI குறித்த நடைமுறைத் திறன்களைப் பயிற்றுவித்து, ஊடகத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
LIVE 24 X 7









