துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் 15-6-2025 அன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்து புதுச்சேரி புறப்படுகிறார். மீண்டும் 17-6-2025 அன்று புதுச்சேரியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார்.
2023 ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் ட்ரோன்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் ஏர் கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ் ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்கவிட 28-5-2025 முதல் 26-7-2025 வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடை முறையில் உள்ளது.
ஆகையால், சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சென்னை விமான நிலையம், ராஜ்பவன் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழிதடங்கள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டு (அரசாங்க ஏற்பாடுகளைத் தவிர) 15-6-2025 மற்றும் 17-6-2025 அன்று அந்த பகுதிகளில் மற்றும் வழி தடங்களில், ரிமோட்லி பைலட் ஏர் கிராஃப்ட் சிஸ்டம்ஸ் (RPAS) ட்ரோன் ஆளில்லா விமானம் பறக்க விட தடை செய்யப்படுகிறது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு காவல் துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









