கடலூர் மயிலாடுதுறை பயணிகள் ரயில் காலை 7 மணியளவில் செம்மங்குப்பம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் பாதையில் வாகனங்கள் செல்லும் பாதையும் உள்ளது. அந்த இடத்தில் ரயில் வருவதை அறியாத பள்ளி வேன் ஓட்டுநர், தண்டவாளத்தில் ரயில் வரவில்லை என்று கருதி வேனை இயக்கியுள்ளார். அப்போது, வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதனால், வேன் ரயிலின் வேகத்தில் இடித்து தள்ளப்பட்டு அப்பளம்போல நொறுங்கி தண்டவாளத்தில் இருந்து பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
இந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மாணவர்கள் 10 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரயில்வே கேட்கீப்பர் முறையாக கேட்டை மூடாமல் தூங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடலூரில், குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து கேட் கீப்பரின் கவனக் குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்பதால், அலட்சியமாக இருந்த கேட் கீப்பரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
LIVE 24 X 7









