புகாரைத் தொடர்ந்து, சங்கத்தின் தலைவர் அரங்கநாதன் மற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள் மது அருந்திவிட்டு ஆபாசமாக நடனமாடியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோ பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்ந்த பத்திரிக்கைகளில் எல்லாம் இந்த மூன்று அர்ச்சகர்களும் தமிழக அரசு அனைத்து சாதி அர்ச்சகர்களின் திட்டத்தில் படித்து வந்தவர்கள் என தெரிவிக்கின்றனர். இவர்கள் எல்லாம் படித்து வந்தால் இப்படி தான் நடந்துகொள்வார்கள் என பதிவிட்டு வருகின்றனர்.
அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் சார்பில் இது குறித்து விசாரித்தோம். அனைத்து செய்திகளும் பொய் என தெரியவந்தது. அவர்கள் தமிழக அரசின் திட்டத்தில் படிக்கவில்லை எனவும், அதற்கான ஆதாரமும் தங்களிடம் உள்ளது. உங்களிடம் ஆதாரம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். மேலும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை, ஏன் உண்மையை ஆர்.எஸ்.எஸ், பாஜக மறைக்கின்றனர்.
தூத்துக்குடியில் உள்ள பயிற்சி பள்ளியில் படித்துள்ளனர் மூவரும். 6 தமிழக அரசு பாடச்சாலைகளிலும் மூன்று அர்ச்சகர்களும் படிக்கவில்லை. இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் இப்படி தவறான கருத்துகளை பரப்புகின்றனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்து சமய அறநிலைய துறை முறையாக விளக்கம் அளித்து புகார் கொடுக்க வேண்டும் எனவும் இப்படி கீழ்தரமான வேலையை செய்யும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் நேரடியாக நடவடிக்கை எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்டமாக அர்ச்சகர்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.
LIVE 24 X 7









