திமுக ஆட்சி ஊழல் நிறைந்துள்ளதால், 2026 ஆம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா கூறுவதற்கு, திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என பொதுமக்கள் கூறி வருவதாகவும், 200 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என கூறிய அமைச்சர் முத்துசாமி, திமுக ஆட்சி அமைத்த பிறகு சந்தித்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பது, மக்கள் திமுக மீது வைத்துள்ள நம்பிக்கை தான் காரணம் என்றார்.
தமிழுக்காக போராடும் திமுக கோப்புகளில் ஆங்கிலத்தில் தான் கையொழுத்து போடுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, நாங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் தான் கையொழுத்து போடுவதாகவும், நீட்தேர்வு விலக்கு பெறுவதிற்கான இரகசியம் ஒன்றுமில்லை என்றும் அந்த தேர்வு வேண்டாம் என்று தான் கூறி வருதாகவும் தெரிவித்தார்.
சட்டமன்ற கூட்டதில் எதிர்கட்சிகள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், அனைத்து நிகழ்வுகளும் ஔிபரப்பு செய்து வருவதாகவும் கூறிய அமைச்சர் முத்துசாமி, கடந்த 4 வருடங்களில் சட்டமன்றம் அறிவித்த 7 அறிவிப்புகள் மட்டும் சாத்தியக்கூறுகள் இல்லாததால் நிறுத்தி வைக்கப்படுள்ளதே தவிர, மன்ற அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது அறிவித்துள்ள 27 அறிவிப்புகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சிறுபாண்மை மக்களை பாதிக்க கூடிய வக்பு வாரிய திருத்த சட்டம் மீதான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான போராட்டங்கள் குறித்து தலைமை அறிவிக்கும் என கூறினார்.
LIVE 24 X 7









