பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள டேலண்ட் ஸ்கூல் ஆஃப் ஸ்கில்ஸ் பள்ளியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பட்கோட்டையைச் சேர்ந்த 5 வயது மற்றும் 10 வயதுடைய 7 சிறுவர், சிறுமியர்கள் ஒரே இடத்தில் இடைவிடாது யோகா, தமிழ் ஓரெழுத்துச் சொற்கள், கணித வாய்ப்பாடு, இயற்பியலில் எஸ் ஐ யுனிட்ஸ் என்னும் அனைத்துலக முறை அலகுகள், 70 ஆங்கில நாவல்களின் பெயர் மற்றும் எழுத்தாளர்களின் பெயர்களை கூறுதல், மழலை பாட்டுக்கள் (Rhymes), எழுத்துக்களின் சுருக்கம், மருந்துகளின் பெயர்கள் சொல்வது உள்ளிட்டவைன சொல்லியும், எழுதியும் காண்பித்து நோபல் உலக சாதனை படைத்தனர்.
இதில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் - ஆஷா தம்பதியான் மகள் ஜோஷ்மிதா இவர் 2 நிமிடத்தில் யோகாஷல் சூரிய நமஸ்காரம் 19 தடவை விரைவாக செய்து சாதனை படைத்தார்.
அதேபோல் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் -சுதா தம்பதியரின் மகன்கள் கிரித்விக் இவர் 500 அப்ரிவேஷன் எண்ணும் சுருக்கக்குறியீடுகளை 5 நிமிடம் 13 வினாடிகள் விரைவாக சொல்லியும் சாதனை படைத்தார்.
அவர்களின் மற்றொரு மகன் கனிஷ்க் இவர் இயற்பியலில் எஸ் ஐ யுனிட்ஸ் என்னும் அனைத்துலக முறை அலகுகளில் 100 எண்ணிக்கைகளை 1 நிமிடம் 49 வினாடியில் சொல்லி சாதனை படைத்தார்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன்-நித்யா தம்பதியரின் மகள் திருவிதா இவர் 70 ஆங்கில புத்தகங்களின் பெயர்கள் மற்றும் ஆசிரியர்களின் பெயர்களை 1 நிமிடம் 40 வினாடிகளில் விரைவாக சொல்லி சாதனை படைத்தார்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முளி - மீனா தம்பதியரின் மகள் நற்பவி இவர் 80 மழலை பாட்டுக்கள் (Rhymes) தமிழிலும் ஆங்கிலத்திலும் 8 நிமிடம் 56 வினாடிகளில் விரைவாக பாடி சாதனை படைத்தார்.
அதேபோல் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார்-சரண்யா தம்பதியரின் மகன் மித்ரன் இவர் தமிழில் ஓரெழுத்துச் சொற்கள் 70.49 வினாடிகளில் சொல்லியும் மற்றும் கணித பெருக்கல், வாய்ப்பாடு 3 நிமிடம் 31 வினாடியில் விரைவாக எழுதியும் இரண்டு சாதனை படைத்தார்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விஜயராஜ் - சத்யபிரியதர்ஷினி தம்பதியரின் மகள் நைரா இவர் 100 .பல்வேறு வகையான நோய்களின் மருந்துகள் மற்றும் எதிர்ப்பு மருந்தின் பெயர்களை 59 வினாடியில் விரைவாக சொல்லி சாதனை படைத்தார்
இவர்களது சாதனைமை நோபல் நிறுவனத்திலிருந்து சிஇஒ டாக்டர் மொகமத் சஃபீர் வந்திருந்து நேரில் ஆய்வு செய்து பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில் இந்த 7 சிறுவர் சிறுமியர்களும் நோபல் உலக சாதனை படைத்ததாக அறிவித்தார் சாதனை நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் கல்வியாளர் வெங்கடேஷ் வரவேற்றார். நிகழ்வில் பட்டுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ ரங்கராஜன், நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா, முன்னாள் நகர் மன்ற தலைவர் ஜவஹர் பாபு, இயக்குனர் ராகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
LIVE 24 X 7









