மத்திய குற்றப்பிரிவில் 2012 ஆம் ஆண்டு தாக்கலான M.P.சிவக்குமார் குடும்பத்திற்கு சொந்தமான திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் அருகில் உள்ள விஜயநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள 5114 சதுரடி கொண்ட ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை பாலசுப்பிரமணியன், K.P.S. கிருஷ்ணன் மற்றும் நிலத்தின் உரிமையாளர் போன்று சிவகுமார் உட்பட சிலர் கூட்டு சேர்ந்து ஆள்மாறாட்டம் மற்றும் போலியான ஆவணங்கள் தயார் செய்துள்ளனர். அந்த சொத்தில் வில்லங்கத்தை ஏற்படுத்தி தங்களுக்கு உரிமையில்லாத இடத்தை அபகரித்ததாக கொடுத்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தலைமறைவாகயிருந்த குற்றவாளி பாலசுப்பிரமணியன் என்பவரை தேடிவந்தனர்.
இவ்வழக்கில் சம்மந்தப்ட்ட சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த K.P.S. கிருஷ்ணன் என்பவரை கடந்த 2012-ம் வருடம் டிசம்பர் மாதம் ஏற்கனவே கைது செய்த நிலையில் மற்றொரு முக்கிய எதிரியான விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தொடர்ந்து 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நிலையில் கைது நடவடிக்கை மேற்கொண்டு வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தி நடவடிக்கை எடுத்திட சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் A.ராதிகா வழிகாட்டுதலின் படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளி விருதுநகர், சிவகாசி, சென்னை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது தன் இருப்பிடத்தை மாற்றி வசித்து வந்த நிலையில் தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வைத்து A1 குற்றவாளி பாலசுப்பிரமணியன் என்பவரை கடந்த 25 ஆம் தேதி கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். குற்றவாளிகள் கூட்டாக சேர்ந்து அபகரித்த சொத்தானது சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 5114 சதுரடிகள் கொண்ட காலி மனை என்பது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









