இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக, இப்பகுதியில் மாலை, இரவு நேரங்களில் மழை விட்டு, விட்டு பெய்வதால், விவசாயிகள் கொண்டு வந்த, 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் ஆகியுள்ளது.
அதேபோல் நான்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், இருந்து கொள்முதல் செய்யப்பட்ட, 25000 நெல் மூட்டைகள், லாரி பற்றாக்குறையால் குடோனுக்கு எடுத்துச் செல்லாமல், ஆங்காங்கே திறந்த வெளியில் உள்ளது. தற்போது மழை பெய்வதால், அந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து சேதம் ஆகி வருகிறது.
மேலும் இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், விரைவாக விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, லாரிகள் மூலம் குடோனுக்கு ஏற்றி அனுப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மூன்று மாதம் வயலில் வெயிலும், மழையிலும் கஷ்டப்பட்டு விளைவித்த நெற்பயிர்கள் தங்களின் கண்முன்னே மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைத்து காணப்படுவது விவசாயிகளை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
LIVE 24 X 7









