மேலும், இதன் ஒரு பகுதியாக ரயில் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உதவியுடன் நாச வேலை தடுப்பு நடவடிக்கை மற்றும் ரோந்து பணியினை மேற்கொண்டர்.

இந்த சோதனையில் எந்தவித சந்தேகத்துக்கிடமான மற்றும் குற்ற சம்பந்தப்பட்ட பொருளும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு திருவலங்காடு ரயில்வே ஸ்டேஷனில் நடந்த sabotage சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது..
இன்று ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையாளர் பி. ராமகிருஷ்ணன் மற்றும் உதவிக்கோட்ட ஆணையாளர் ராமமூர்த்தி அவர்களின் உத்தரவின் பெயரில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கே பி ஜெபாஸ்டியன் தலைமையில், துணை உதவியாளர் வி.அன்பு செழியன் மற்றும் டி.கதிரவன் மற்றும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரின் உதவியுடன் எக்மோர் ரயில்வே ஸ்டேஷன், காத்திருப்போர் அறை, டிக்கெட் எடுக்கும் இடம், நடை மேம்பாலம், ரயில்வே சிக்னல் ஏரியா, மேலும் முக்கியமான இடங்களில் மற்றும் ரயில்வே பாதையில் ரோந்து சென்று நாச வேலை தடுப்பு நடவடிக்கையை (anti-sabotage check) மேற்கொண்டனர்.
மேலும் பயணிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
உங்கள் பயண பைகளையும் விலை உயர்ந்த பொருட்களையும் பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
ரயில் பாதையை கடப்பதற்கு நடை மேம்பாலத்தை பயன்படுத்துமாறு விளக்கப்பட்டது.
ரயில் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஓடும் ரயிலில் ஏறுவதையும் இறங்குவதையும் தவிர்க்குமாறு விளக்கப்பட்டது.
ஓடும் ரயிலின் முன்னாடியும்,ரயில்வே பாதையிலும் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
அனுமதி இல்லாமல் பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஆண் பயணிகள் பயணம் செய்யக்கூடாது என்பதையும், மீறிப் பயணம் செய்தால் ரயில்வே சட்டம் 1989 கீழ் அதற்கான தண்டனை குறித்தும் விளக்கப்பட்டது.
மேலும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உதவிக்காக 139 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம் எனவும் விளக்கப்பட்டது

இதே போல சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய நுழைவு வாசல்களில் பாதுகாப்பு படை போலீசார் குவிக்கப்பட்டு பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர். பயணிகள் காத்திருக்கும் அறைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.
LIVE 24 X 7









