விழாவின் சிறப்பு அம்சமாக, கொடியேற்றத்திற்குப் பிறகு வெள்ளை நிற புறாக்கள் வானில் பறக்கவிடப்பட்டன. தூத்துக்குடி மாநகரம் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்துடன் திகழ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் பக்தர்கள் புறாக்களைப் பறக்க விட்டனர்.
தூத்துக்குடி மட்டுமில்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான மக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்க வருகை தந்துள்ளனர்..
திருவிழாவையொட்டி, பேராலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள், ஜெபமாலைகள் மற்றும் பல்வேறு பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த விழாவில் வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி நற்கருணை பவனியும், 4-ம் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும், 5-ம் தேதி நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனியும் நடக்கிறது.
திருவிழாவின் இறுதி நாளில் நடைபெறும் தேர்பவனி மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
LIVE 24 X 7









