மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் கோவை, செல்வபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இந்த தகவலைத் தொடர்ந்து பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை பிடிக்க கோவையில் 5 சிறப்பு தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கோவை செல்வபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து காவல் துறையினர் இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், வாளையார் ஆகிய பகுதிகளுக்கு 5 தனிப்படை போலீசார் சென்று தீவிரமாக கண்காணித்த வருகின்றனர்.
செல்வபுரம் பகுதியில் 8 பேர் கொண்ட சிறப்பு பிரிவு தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, விரைவில் அவர் பிடிக்கப்பட்ட விடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
LIVE 24 X 7









