இந்தாண்டு நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத் துறையினர் அனுமதி அளித்தனர். நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசித்து வந்தனர். வழக்கமாக மே 31 ஆம் தேதி மாலை வரை பக்தர்கள் மலையேற அனுமதிப்பார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் கன மழை காரணமாக கடந்த மே 25 ஆம் தேதி பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு வனத் துறையினர் தடை விதித்தனர் .
மழைக்காலத்தில் பாதைகள் சேதமடைந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மலை ஏறுவதில் தடை விதிக்கப்பட்டிருந்தது . எனவே, மழைக்காலத்தில் அல்லது வனத்துறையின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், மலை ஏறுவதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுவது முக்கியமாக உள்ளது.
இந்நிலையில் நேற்றுடன் இந்த ஆண்டுக்கான வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கான அனுமதி காலம் முடிவடைந்தது. இதனால் இனி பக்தர்கள் மலையேற இந்த ஆண்டு அனுமதி இல்லை என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுமார் 2.50 லட்சம் பக்தர்கள் மலையேறி உள்ளனர் என்று வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தற்போது, வெள்ளியங்கிரி மலைக்கு ஏறுவதற்கான அனுமதி பற்றிய எந்த புதிய அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால், இனிவரும் காலங்களில், பயணத்தைத் திட்டமிடும் முன், வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (https://forests.tn.gov.in/) அல்லது உள்ளூர் செய்திகளைப் பரிசீலிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
LIVE 24 X 7









