பின்னணி:
2011ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்ட ராமலிங்கம், நாகப்பட்டினம் மாவட்டம், சென்னை அம்பத்தூர், மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.
2025ஆம் ஆண்டு காவல் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்ற அவர், துறை அனுமதியுடன் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமை பணிகள் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
இத்தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம், துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணி நியமன ஆணையையும் பெற்றுள்ளார்.
காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்து கொண்டே, விடாமுயற்சியுடன் அரசுத் தேர்வுகளில் பங்கேற்று உயர் பதவிக்குத் தேர்வான ஆய்வாளர் ராமலிங்கத்தின் இந்தச் செயல், காவல்துறையினருக்குப் பெருமை சேர்ப்பதோடு, மற்றவர்களுக்கும் ஒரு உந்துதலாக அமைந்துள்ளது.
இவர் வரும் செப்டம்பர் 7, 2025 முதல் பணிப் பயிற்சிக்குச் செல்ல உள்ளார். இந்த நிகழ்வின்போது, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் M. ராமமூர்த்தி உடனிருந்தார்.
LIVE 24 X 7









