இந்த நிலையில், வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் வீடியோக்களைப் பென் டிரைவில் சமர்ப்பிப்பதற்காக வீரலட்சுமி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஆஜரானார். சாட்சியங்களை அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த வழக்கில் தொடர்புடைய சமூக வலைத்தள ஐடிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விஜய் அரசியல் பயணம் குறித்து விமர்சனம்
செய்தியாளர் சந்திப்பில், நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் வீரலட்சுமி கடுமையாக விமர்சித்தார். "திருச்சியில் விஜய் மக்களைச் சந்திக்கச் செல்லவில்லை, அவர் 'ஜனநாயகன்' திரைப்படச் சூட்டிங்கிற்குச் செல்வது போலத்தான் சென்றிருக்கிறார்" என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும், "கேரவனில் சென்று மக்களைச் சந்திப்பது ஒரு பிரச்சாரமா?" எனக் கேள்வி எழுப்பிய அவர், கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையாகிப் பல இளைஞர்கள் சிறைக்குச் செல்வதாகவும், "நடிகர்கள் பின்னால் சென்றால் சிறையைத்தான் நிரப்ப முடியும்; நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையை நிரப்ப முடியாது" என்றும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார். பாஜக, தவெக, நாம் தமிழர் கட்சி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் ஐடி விங் பெயரில்தான் இதுபோன்ற பெண்கள் குறித்து அவதூறாகப் பரப்பப்படுகிறது எனவும் அவர் ஆவேசமாகக் கூறினார்.
LIVE 24 X 7









