நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என கோவை, தடாகம் பகுதியில் ஆக்கிரமிப்பு செங்கல் சூளைகளால் யானைகளின் வழித் தடங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஆனைகட்டியில் இருந்து கேரளா செல்லும் சாலையில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்லும் போது காட்டு யானைகள், மான் உள்ளிட்ட வன விலங்குகள் விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றன.
எனவே இந்த சாலையை இரவு நேர வாகன போக்குவரத்தை தடை செய்ய வேண்டும். மேலும் ஆனைகட்டி பகுதியில் சட்ட விரோதமாக செயல்படும் ரிசார்டுகளை இடித்து அகற்ற வேண்டும், இது தவிர மருதமலை இல் 184 அடி உயரத்திற்கு முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இங்கு முருகன் சிலை அமைப்பது தொடர்பான கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அரசு தரப்பு விளக்கம் அளிக்க கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
LIVE 24 X 7









