இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் வழியாக டேராடூன் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளிடம் சி.ஆர்.பி.எப் வீரர்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர் மேலும் அவர்கள் வைத்து இருந்த உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது. அப்பொழுது பயணி ஒருவர் பையில் இருந்த கை துப்பாக்கி தோட்டா வைத்து இருந்தார். அதனை பறிமுதல் செய்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரதீப் குமார் என்பதும், இவர் டேராடூனில் சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் கை துப்பாக்கி மற்றும் தோட்டாவை பறிமுதல் செய்து அவரை கோவை பீளமேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் பீளமேடு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









