இந்த நிலையில் கடந்த வருடம் மே மாதம் 21 ஆம் தேதி அவரது வீட்டில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக ஜான் ஜெபராஜ் மீது அந்த சிறுமிகள் காந்திபுரம் மத்திய மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் ஜான் ஜெபராஜ் மீது போஸ்கோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கு இடையே பாதிரியார் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவணா சுந்தர் 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் ஜான் ஜெபராஜ் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தேடி வந்தனர். இதற்கு இடையே ஜான் ஜெபராஜ் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை கோவை காந்திபுரம் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
LIVE 24 X 7









