முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் கைதான பிறகு அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிய ஆரம்பித்தன. இவர், சினிமாவில் தயாரிப்பாளரான பிறகு, திரைப்படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட போது சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல நடிகர்- நடிகைகள் தொடர்பு என்பது பிரசாத்திற்கு கிடைத்தது.
இதனைப் பயன்படுத்திக்கொண்ட பிரசாத், கடந்த 10 ஆண்டுகளாக பல நடிகர்- நடிகைகளை தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்கென சொகுசு விருந்துகள் சென்னையில் பல்வேறு இடங்களில் பிரசாத் நடத்தியதாகவும் அதற்கு போதைப் பொருளை மதுவிருந்தில் சப்ளை செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் கொக்கைன் பொருளை பெற்று பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்தை உரிய மருத்துவ பரிசோதனை செய்து, அவருடைய பணப்பரிவர்த்தனை, அவருடைய வீடுகள் முழுமையாகவும் சோதனை செய்யப்பட்டு உரிய ஆதாரங்களுடன் அவரை கைது செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து, முன்னணி இயக்குனரான விஷ்ணுவர்தனின் தம்பியும், கழுகு படத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் அவரை தேடி வருகின்றனர். நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் கொடுத்துள்ள நிலையில், அவருடைய போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு, நடிகர் கிருஷ்ணா தலைமறைவான நிலையில், அவர் கேரளாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணா உடனடியாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் நேற்று சம்மன் கொடுக்க சென்றபோது, கிருஷ்ணா வீட்டில் இல்லை. அவரது வீட்டில் இருந்தவர்களிடம் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதால் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
LIVE 24 X 7









