தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வரும் சூழலில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே பெற்றோர்களுக்கு பயம் அதிகரித்து வருகிறது. ஆரம்பப் பள்ளி தொடங்கி, மேல்நிலைப்பள்ளி வரையிலும், பெண் குழந்தைகள் மட்டுமில்லாது இரு பாலினத்தவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் தொடர்கிறது.
பள்ளிக்கல்வித்துறை
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாலியல் குற்றச்சாட்டுக்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சினைக்களுக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறை அமைசரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
25 ஆசிரியர்கள்
தமிழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்ட 25 ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.
Read More: மத்திய அமைச்சர் ப்ளாக்மெயில் செய்வதாக முதலமைச்சர் விமர்சனம்!
கடந்த 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் 36 வழக்குகள் பள்ளிகக்கு வெளியில் நடைபெற்றுள்ளன. சிறையில் 11 பேர் உள்ளனர். 3 பேர் இறந்துள்ளனர்.மற்றவர்களிடம் பல வழக்குகளில் விசாரணை நிறைவுற்று இருபதுக்கும் அதிகமான ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபனம் ஆகி உள்ளன.
ஆசிரியர்கள் நீக்கம்
பள்ளி கல்வித்துறையில், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, புதுக்கோட்டை, விழுப்புரம், தருமபுரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆசிரியர் என 7 ஆசிரியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தொடக்கக்கல்வித்துறையில் 15 ஆசிரியர்கள் நீக்கம் செய்யப்ப்பட்டுள்ளனர்.
பாலியல் வழக்குகளில் சம்பந்தபட்ட 3 ஆசிரியர்கள் இறந்துள்ளனர். இவர்களின் சான்றிதழ்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பெற்று ரத்துச் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழக அரசின் நடவடிக்கை ஒருபுறம் இருக்க, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More: IQAir-ன் உலக காற்று தர அறிக்கை.. இந்தியாவிற்கு 5-வது இடம்...!
LIVE 24 X 7









