தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான டைலர் ராஜா என்பவர் தலைமறைவானார். கடந்த 28 ஆண்டுகள் ஆக தலைமறைவாக பதுங்கி இருந்த சாதிக் ராஜா (எ) டைலர் ராஜாவை சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். பலத்த பாதுகாப்புடன் அவரை கோவைக்கு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் காவலர்கள் பணியில் இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஒருவர் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு இருப்பது, இவ்வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவிடம் தற்பொழுது கோவை, அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
LIVE 24 X 7









