கோவை மாவட்டம் குரும்பப்பாளையத்தில் ஏப்.26 மற்றும் 27-ல் நடைபெறவுள்ள தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் விஜய் பங்கேற்று, சட்டமன்ற தேர்தல் களப்பணிகள், ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து விளக்கவுரை ஆற்றுவார் என்று பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மாநாட்டிற்கான பணிகளை கவனித்து வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜயின் வருகை மற்றும் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். “விஜய் நேரில் பங்கேற்க உள்ளார், அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது” என அவர் உறுதியாகக் கூறினார்.
ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் தான். எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும்பாகத் திகழும் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும், நம் வெற்றித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த நிலையில், தவெகவின் மாநாடு குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தவெக பூத் கமிட்டி மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், மாநாட்டில் பங்கேற்கும் விஜய் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
LIVE 24 X 7









