தமிழ்நாடு வாசகர் வட்டம் நிகழ்ச்சி நங்கநல்லூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரு. நாகராஜன், “தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் எப்போது வந்ததோ அப்போதிலிருந்து தேசப்பற்று பற்றி தவறான கண்ணோட்டத்தை மக்களுக்கு விதைத்து உள்ளனர். தற்போது திமுகவிற்கு பயம் வந்துள்ளது, ஆன்மீகம் வேறு அரசியல் வேறு என கூறி வருகிறார்கள்.
90 சதவீதம் இந்துக்கள் எங்கள் கட்சியில் உள்ளதாக கூறுகின்றனர். இதன் மூலம் மக்களை மோசடி செய்து ஏமாற்றும் முனைப்பில் திமுக செயல்படுகிறது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதி கொல்லப்பட்டால் இங்கு போராட்டம் நடத்துகிறார்கள். பாலஸ்தீனத்தில் போர் நடந்தால் இங்கு போராட்டம் நடத்தப்படுகிறது.
தேசத்திற்கு எதிரான கருத்துக்களை யார் நினைத்தாலும் அது தேசத் துரோகம் தான். ஹெச்.ராஜா சொன்னது போல, காஷ்மீரில் பல படுகொலை சம்பவத்திற்கு தொடர்புடைய ஒருவர் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துகிறார்கள். அதனை தான் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எந்த ஒரு நாட்டிலும் தீவிரவாதம் பயங்கரவாதத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை நமது கருத்து. ஆனால் தீவிரவாத கருத்து உடையவர்கள் தீவிரவாத தலைவர்களை கொண்டாடுவது சட்டவிரோதமாகும்.
கேப்டன் முகுந்த் வரதராஜன் உம்மை சம்பவம் எங்கு நடந்ததோ அந்த இடத்தில் அமரன் திரைப்படத்தை எடுத்துள்ளனர். அதேபோல் ஜாபர் சாதிக் இஸ்லாமியர் என்பதால் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கவில்லை அவர் போதை பொருள் கடத்தியால்தான் ஒரு குற்றவாளியாக கருதப்படுகிறார்.
காஷ்மீர் எல்லை பகுதியில் சில இஸ்லாமியர் தீவிரவாதம் செயல் செய்வதல் நாட்டில் அனைத்து இஸ்லாமியர்களை நாங்கள் சொன்னதாக கூறி போராட்டம் நடத்துவது ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது. காஷ்மீரில் எந்த சக்தியாலும் 360 சட்டத்தை திரும்ப கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்” என்றார்.
LIVE 24 X 7









