அம்மா திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டித் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அது போன்ற ஸ்டிக்கர் எங்கும் ஒட்டப்படவில்லையெனப் பதிலளித்தார். அதானி குழுமத்திற்கு நாடு முழுவதும் விமான நிலையங்கள் துறைமுகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது பாஜகவிற்கு 276 கோடி ரூபாய் நிதி வழங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு விமானம் ஒன்றை வழங்கி அது விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது அந்த விமானத்தைப் பயன்படுத்தி அவர் எங்கெல்லாமோ சென்று வருகிறார்.
மத்திய அரசினுடைய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை வருமான வரித்துறை போன்றவைகளை வைத்து விஜயை மிரட்டி உருட்டிக் கட்சி தொடங்க வைத்துள்ளனர். திமுகவிற்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதற்காகவே கட்சி தொடங்கியுள்ளார் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அவர் கேட்காமலேயே வழங்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநருக்கும் திருவள்ளுவருக்கும் தொடர்பே கிடையாது அவருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம் தமிழ் தெரியாத ஆளுநர் இது போன்ற தேவையில்லாத நிகழ்வுகளை நடத்தி இருக்க வேண்டாமெனத் தெரிவித்தார்.
LIVE 24 X 7









