இதுவரை, UPI மூலம் பணம் அனுப்பும்போது, ஏதேனும் பிழையால் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், பணம் மீண்டும் வர 30 விநாடிகள் வரை எடுத்துக் கொண்டது. ஆனால், புதிய விதிகளின்படி, இந்த நேரம் 10 விநாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அதற்கான தகவலும் பணம் திரும்பும் நேரமும் 10 விநாடிக்குள் நிகழ வேண்டும் என NPCI வலியுறுத்தியுள்ளது.
மேலும், யாராவது ஒருவருக்கு பணம் அனுப்பும் போது, அவருடைய UPI ID சரியானதா என்று சரிபார்க்கும் செயல்முறையும் விரைவாகவும், துல்லியமாகவும் செயல்பட புதிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. Failed Transaction, Transaction Reversal நேரமும், பணம் Deduct ஆனதை அறிந்துகொள்ளும் நேரமும் 30ல் இருந்து, 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. UPI ID-ஐ சரிபார்க்க எடுத்துக்கொள்ளும் 15 நொடிகள் 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல ஒரு பணப்பரிவர்த்தனை செய்யும்போது UPI ID சரிபார்ப்பிற்கு 15 நொடிகள் வரை எடுத்துக் கொள்ளும் நிலையில் அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் யுபிஐ 884 சரிபார்ப்பு நடைபெறும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாற்றங்கள், வங்கிகளும், பில்லிங் நிறுவனங்களும், பிம் ( BHIM App ) உள்ளிட்ட UPI செயலிகள் மூலம் பண பரிமாற்றம் செய்யும் பயனர்களுக்கு அதிக நம்பிக்கையையும், எளிதான பயன்பாட்டையும் உருவாக்கும் வகையில் அமைகின்றன. இந்த நடவடிக்கைகள், இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இடைவெளியைக் குறைக்கும் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.
2024ஆம் ஆண்டில் மட்டும், இந்தியாவில் மாதத்திற்கு 1,300 கோடிக்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், NPCI புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









