இவர் எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அரசியல் வட்டாரத்தில் செல்வாக்குமிக்க நபராக திகழும் பிரபு சவுகானின் மகன், பிரதீக் சவுகான் மீது கர்நாடகவின் பிதர் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு பதியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 25 வயதுமிக்க பெண்ணுடன் பிரதீக் சவுகானுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது. இந்த நிச்சயதார்த்தமானது பெண் வீட்டாரின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் தான் நடைப்பெற்றுள்ளது. நிச்சயதார்த்தம் ஆன நிலையில், திருமண தேதியினை தொடர்ந்து தள்ளிப்போட்டு கொண்டே வந்துள்ளார் பிரதீக் சவுகான். இருப்பினும், விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி, அந்த பெண்ணுடன் பலமுறை உடல் ரீதியான உறவு வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி, திருமணம் தொடர்பான தேதியினை உறுதி செய்யுமாறு பெண் வீட்டார், முன்னாள் அமைச்சர் பிரபு சவுகானையும், அவரது மகன் பிரதீக் சவுகானையும் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது திருமணத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லையென்றும், உங்களால் முடிந்ததை செய்துக் கொள்ளுங்கள் எனவும் பிரபு சவுகான் தரப்பினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் தரப்பினர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரினை அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில், ‘முன்னாள் அமைச்சரும், அவுரத் சட்டமன்றத் தொகுதி பாஜக எம்எல்ஏவுமான பிரபு சவுகானின் மகன் பிரதீக் சவுகான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக’ குறிப்பிட்டுள்ளார்.
இதுத்தொடர்பாக பிதர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம், கர்நாடக மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









