தெருக்களில் யாசகம் செய்யும் குழந்தைகளுக்கும், அவர்களுடன் இருக்கும் பெரியவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, அந்தப் பெரியவர்கள் உண்மையில் குழந்தையின் ரத்த உறவினர்களா என்ற உரிய தகவலை உறுதிப்படுத்துவதற்காக என அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதைத் தடுக்க, பஞ்சாப் அரசு சமூக பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலமா, Project Jeevanjyot-2 திட்டத்தின் கீழ், DNA பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, மாவட்ட ஆட்சியர்களுக்கு (Deputy Commissioners) அனுப்பப்பட்டு, தெருக்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளோடு இருக்கும் பெரியவர்களின் உறவை உறுதிப்படுத்த DNA பரிசோதனை செய்யத் தெரிவித்துள்ளனர்.
இது, குழந்தைகளைத் தவறான பாதுகாவலர் என்ற பெயரில் சுரண்டப்படுவதை தடுக்க உதவும். இந்த முயற்சி, குழந்தைகளோட பாதுகாப்பை உறுதி செய்யவும், கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கவும் ஒரு பெரிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.
சோதனை முடியும்வரை குழந்தையைப் பாதுகாப்பாக வைக்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்; கடத்தப்பட்டு, யாசகம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் குழந்தைகள் இதன்மூலம் பாதுகாக்கப்படுவர் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அரசின் இந்தத் தீர்மானம் குழந்தை பாதுகாப்பு மற்றும் மனிதக் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் நாடு முழுவதும் விரிவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாகக் குழந்தைகள் நலவாரியங்கள் வலியுறுத்துகின்றன.
LIVE 24 X 7









