தீப்தி என்ற பெண் வடக்கு பீகாரில் உள்ள முசாபர்பூர் காவல்நிலையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனக்கு 2021 ஆம் ஆண்டு திருமணம் ஆனதாகவும் ஆரம்பகட்டத்தில் வழக்கை சந்தோஷமாக இருந்ததாக கூறியுள்ளார். ஆனால், சில மாதங்கள் கடந்த பிறகு பைக், பணம், நகை உள்ளிட்டவைகளை வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தார் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களது நிபந்தனைகளை தான் ஏற்காததால், நோய்வாய்ப்பட்ட தனது கணவருக்கு சிறுநீரகத்தை தனமாக வழங்க வேண்டும் என மாமியார் கேட்டதாக தீப்தி கூறியுள்ளார். ஆரம்பத்தில் தான் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டதாகவும், ஆனால் பின்னர் அவர்கள் தன் மீது அழுத்தம் கொடுக்கத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சிறுநீரகத்தை தானம் செய்ய மறுத்ததால் உடல் ரீதியாக தாக்கப்பட்டு வீட்டை விட்டு தன்னை வெளியேற்றியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால், மனமுடைந்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றதாகவும், நடந்தவற்றை அவர்களிடம் கூறிய பின்னர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தீப்தியின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், கணவர், மாமியார் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்டு மருமகளை கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









