இந்திய ராணுவத்தினர் ஆப்ரேஷன் சிந்தூர், என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்தியா நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவம் நடத்திய ஏவுகனை தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். இதன் முலம், ராணுவம் அல்லது பயங்கரவாத குழுக்கள் மூலம் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த தாக்குதல் நடக்கும் என்பதால், காஷ்மீர் எல்லை வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், இந்த காரணமாக, பிரதமர் மோடி தனது வெளிநாடு பயணங்களை ரத்து செய்துள்ளார். குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அந்த பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, உளவுத்துறை கொடுத்த தகவலையடுத்து, வெளிநாடு பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. அதோடு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









