அம்மாநில அரசின் தடை உத்தரவை தொடர்ந்து, அந்த நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தை நாடி மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பைக் டாக்சிக்கு அரசு விதித்த தடை செல்லுபடியாகும் என்று உத்தரவிட்டது. வருகிற 15-ம் தேதிக்கு பிறகு பைக் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை என்று ஏற்கனவே உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. பைக் டாக்ஸிகளின் செயற்பாடுகள் தற்போது உள்ள மோட்டார் வாகன சட்டத்தில் உரிய சட்ட அடிப்படை இல்லாமலேயே இயங்குவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் கேள்விகள் எழுப்பப்படுவதால், சட்ட திருத்தம் செய்யப்படும் வரை இந்த சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இதனால், கர்நாடகா மாநிலத்தில் மக்கள் பைக் டாக்ஸி வசதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதற்கு மாற்றாக அரசுப் போக்குவரத்து மற்றும் ஆட்டோ சேவைகள் உள்ளிட்டவையே பொதுமக்களுக்குப் பயணத்திற்கு விருப்பமானதாக இருக்கும். பைக் டாக்ஸி தொழிலில் ஈடுபட்டு வந்த பலர், இந்தத் தடை காரணமாக வேலை இழக்கும் சூழ்நிலையில் உள்ளனர்.
மேலும் கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை பைக் டாக்சிக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பைக் டாக்ஸி இயக்கும் நிறுவனங்கள் மற்றும் ஓட்டுநர்கள் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதற்கான தகவலும் வெளியாகியுள்ளது.
LIVE 24 X 7









